Advertisement

Ephphatha Thirakkapaduvathaaka - எப்பத்தா திறக்கப்படுவதாக - LYRICS

 

Ephphatha Thirakkapaduvathaaka - எப்பத்தா திறக்கப்படுவதாக - LYRICS

ALWIN THOMAS
RUAH MEDIA PRODUCTIONS


எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே

2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ…
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ…
இல்லாதவைகளை இருப்பவைப்போல & 2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்
கூடுதல் சரணங்கள்

3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க
வானங்கள் திறக்கலையோ!
கையளவு மேகத்தால் பெருமழை பொழிய
அற்புதம் செய்யலையோ!
என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2
கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே
கிருபையாய் பொழிந்தருளும்…

4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து
அற்புதம் பெறவில்லையோ
குருடரின் கண்களும் உம் கரம் படவே
பார்வை பெறவில்லையோ..
ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2
அற்புதம் செய்தருளும் என் இயேசுவே
அற்புதம் செய்தருளும்

Ephphatha Thirakkapaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக Lyrics in English

eppaththaa thirakkappaduvathaaka – 4

vaanam thiranthu theyvam paesanum
vaasalkal ellaam inte thirakkanum

eppaththaa thirakkappaduvathaaka – 4

1. thirantha vaasalai un munnae vaiththaen
entu sonnavarae
oruvarum poottakkoodaa vaasalkal thirappaen
entu uraiththavarae
thaaveethin thiravukolaith tholinmael vaiththu & 2
thirakkach seypavarae en vaasalkal
thirakkach seypavarae

2. aapirakaamum saaraalum eesaakkaip peravae
karppaththaith thirakkalaiyo…
annaalin kannnneerkku saamuvael thanthu
theerkkanaay eluppalaiyo…
illaathavaikalai iruppavaippola & 2
alaiththuth thantharulum en vaalvilae
uruvaakkith thantharulum
kooduthal saranangal

3. eliyaavin jepam kaettu akkini irakka
vaanangal thirakkalaiyo!
kaiyalavu maekaththaal perumalai poliya
arputham seyyalaiyo!
en thaesam engilum elupputhal malaiyai & 2
kirupaiyaay polintharulum en Yesuvae
kirupaiyaay polintharulum…

4. sevidarum oomaiyum kattukal utainthu
arputham peravillaiyo
kurudarin kannkalum um karam padavae
paarvai peravillaiyo..
aelai en pelaveenam ikkanam neengida & 2
arputham seytharulum en Yesuvae
arputham seytharulum

Post a Comment

0 Comments