Advertisement

YESUVIN NAAMAM - இயேசுவின் நாமம் - LYRICS

YESUVIN NAAMAM - இயேசுவின் நாமம் - LYRICS



இயேசுவின் நாமம் அதிசயமாமே

என்றென்றும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்
என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவே
எப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார்

1. காடு மலையும் மேடானாலும்
கர்த்தரே வழிகாட்டி நடத்தினார்
இம்மானுவேல் அவா என்னோடிருந்துமே
இம்மட்டும் காத்ததால் ஸ்தோத்திரிப்பேன்

2. போக்கும் வரத்தும் ஆபத்திலும்
காக்கும் தம் பலமான கரங்களே
நம்பிடுவேனே நான் அண்டிடுவேன் நித்தம்
நன்றி மறவாமல் ஸ்தோத்திரிப்பேன்

3. நிந்தை சுமந்த நேரங்களில்
தந்தை தம் பெலமீந்து தேற்றினாரே
என்னென்ன துன்பங்கள் இன்னும்
வந்தாலுமே – மென்மேலும்
இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்

4. சோதனையான வியாதிகளில்
வேதனை மரண படுக்கையிலும்
சித்தம் நிறைவேற முற்றும் குணமாக்கி
ஜீவன் அளித்ததால் ஸ்தோத்திரிப்பேன்

5. பாக்கியமான இரட்சிப்புமே
பெற்றேன் இக்கனமான அழைப்புமே
ஆனந்த தைலத்தின் வல்ல அபிஷேகம்
அன்போடு ஈந்ததால் ஸ்தோத்திரிப்பேன்

Post a Comment

0 Comments