Advertisement

AASAIGAL - ஆசைகள் - LYRICS

AASAIGAL - ஆசைகள் - LYRICS 

Giftson Durai



நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கோபத்தால் பகைத்தாலும்
தேவன் நீர் நகைக்கிறீர்
நான் நினைக்கும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்

அடைத்ததின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
அடைத்ததின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்

தகப்பன் அல்லவோ
மீன் கேட்டால் பாம்பை தருவீரோ
தகப்பன் உம்மிடம்
உம் தயவொன்றை கேட்கிறேன்

வேறென்ன எனக்காசை
உம் தயவை பாட வேண்டும்
ஆசையில் ஒரு ஓசை
உம் ஜனங்களை அது தொட வேண்டும்

கேட்பதில் தவறில்லை
சித்தப்படி கேட்கிறேன்
நீர் தந்த வாழ்க்கையில்
அர்த்தம் அதை சேர்த்திடும்

மனதின் ஆழங்கள்
நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்
அலங்கோலங்கள் தெரிந்தும்
புரிந்திருக்கின்றீர்

எங்கு போக நேர்ந்தாலும்
உம் சமூகம் வந்து விழுகிறேன்
பிறர் கண்டு சிரித்தாலும்
என்னை விட்டு கொடுக்கிறேன்

யாரும் அறியாமல்
பக்கங்களை பார்க்கிறீர்
அகத்தில் விழும் காயங்கள்
அத்தனையும் ஆற்றுவீர்

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கோபத்தால் பகைத்தாலும்
இயேசு நீர் இருக்கிறீர்
நான் விரும்பும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்

அடைப்பதின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்
அடைப்பதின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்

சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்

Post a Comment

0 Comments