Advertisement

EL YESHURAN - ஏல் யெஷுரன் - LYRICS

 BELAVANAI ENNAI - EL YESHURAN - LYRICS

JOHN JEBARAJ

LEVI MINISTRIES



பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

 ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Post a Comment

0 Comments