VAAZHTHUGIREN YESU NATHA - LYRICS
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே
அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே
1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்
2. நித்திரையை இன்பமாக்கி
பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர்
3. பலவிதமாம் சோதனைகள்
எமை சூழச் வந்திருந்தும்
ஒன்றும் எமை அணுகிடாமல்
அன்புடனே பாதுகாத்தீர்
4. சந்தீப்பீரே இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுதும்
ஆவிகுள் யான் பிழைக்க
5. தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புது நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருச் சித்தமதில்
6. பாவமென்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாம் பாதை செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்
7. படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக
8. நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்
0 Comments