அரணான பட்டணம்
By KASSANDRA JOEL
உந்தன் அன்பை காணும்போது
தீயும் குளிராய் மாறியதே
இரவும் பகலும் உந்தன் நாமம்
தேடி அலைகின்றேன்
அலைந்து திரிந்த எந்தன் மனதை
திரும்ப திரும்ப அழைக்கின்றதே
நிகரில்லா உம் அன்பை எனக்கு
பரிசாய் அளித்தீரே
உறவே என் உயிரே நீரே
உயிரே என் உறவாணீரே
அன்பே என் அழகே நீரே
அழகே என் அடைக்கலம் நீரே
அரணான பட்டணம் நீரே
பார் போற்றும் பரிசுத்தர் நீரே
இம்மட்டும் வழி நடத்தின எபிநேசர் நீரே
அரணான பட்டணம் நீரே
பார் போற்றும் பரிசுத்தர் நீரே
இனிமேலும் பார்த்துக் கொள்ளும் யெகோவா யீரே
2. உம்மை விட்டு நான் விலகி சென்றேன்
கரங்களை நீர் பிடித்து இழுத்தீர்
அரவணைத்து முத்தமிட்டு மகனாக்கினீர்
கருவறையில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீர்
கண்மணிப் போல் தினமும் எனை பாதுக்காக்கின்றீர்
யார் குறை சொன்னாலும்
யார் குற்றம் சொன்னாலும்
நீர் என்னை ஆதரிப்பீர்
யார் வெறுத்தாலும்
யார் தள்ளினாலும்
நீர் என்னை சேர்த்துக்கொள்வீர்
நன்மைகள் எதிர்ப்பார்த்து
உதவாத தேவன் நீரே
உம்மையே என்றும் நான் பற்றிக் கொள்வேன்
முடிவில்லா இரக்கத்தால் எனை
மூடிக்கொள்ளும் தேவன் நீரே
உம்மையே என்றும் நான் பற்றிக் கொள்வேன்
யார் குறை சொன்னாலும்
யார் குற்றம் சொன்னாலும்
நீர் என்னை ஆதரிப்பீர்
யார் வெறுத்தாலும்
யார் தள்ளினாலும்
நீர் என்னை சேர்த்துக்கொள்வீர்
வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டும் தேவன் நீரே
எங்களையும் இந்த நாளில் உயர்த்திடுவீர்
0 Comments