Advertisement

UMMAITHAN NAMBI - உம்மை தான் நம்பி - LYRICS

UMMAITHAN NAMBI - உம்மை தான் நம்பி - LYRICS

LUCCAS SEKAR



உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா

உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

உலகமோ நிலையில்லை
சார்ந்து கொள்ள இடமில்லை
நித்தியா கன்மலையே
அசையாத பர்வதமே
அரணான கோட்டையே
நான் நம்பும் கேடகமே
உம்மை என்றும் நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போவதில்லை

நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழிநடத்திடுவார்
தடைகள் யாவும் நீக்கி
என்னை வழி நடத்திடுவார்
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே

மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதையா
என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
நல்ல பங்கு நீர் தானையா
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்

பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே
கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
தீங்கை நான் காண்பதும் இல்லையே
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்


Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa
Ummai Thaan saarnthu Vaalkiren yeasaiyaa

Ulakamo Nilaiyilai Chaarnthu Kolla Itamilai
Niththiya Kanmalaiye Achaiyaatha Parvathame
Aranaana Kottaiye Naan Nampum Ketakame
Ummai Entrum Nambiyullen
Vetkappattu Povathilai

Naan Pokum Payanam Thuram
Yaar Thunai Cheythituvaaro
Yaakkopin Thevan Thunaiye
Ennai Vazhinataththithvaar
Niththiya Vazhvaik Kaana
Ennaiyum Cherththituvaare

Maayai Nitraintha Ulakinilee
Nigamontrum Illai Atrinthene
Ethai Naan Chaarnthu Ponaalum
Kaanal Neeraip Pol Mtraiyuthayyaa
Ententrum Ennai Vittetupataatha
Nalla Pangku Neer Thaanaiyaa
Immaikkum Mtrumaikkum Theyvame
Nigamaana Thechaththil Cherththituveer

Post a Comment

0 Comments